11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.
11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 35 ஆண்டு காலமாக சத்துணவுத் துறையில் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. அதாவது :- சத்துணவு திட்டத்திற்கான தனித்துறையை ஏற்படுத்த வேண்டும். மேலும், விலைவாசிக்கேற்ப மாணவர்களுக்கு வழங்கப்படும். உணவு செலவீட்டுத் தொகையினை ரூ. 5 ஆக உயர்த்த வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிடவும், சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்குப் பிறதுறை அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் 9 மாதம் மகப்பேறு விடுப்பு அளிக்க வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் பலமுறை கோரிக்கையான பொறுப்புப்படி ரூ. 600 நிலுவையுடன் வழங்க வேண்டும். பணிநேரங்களின் போது நடக்கும் விபத்துகளுக்கு ஆபத்து கொடுப்பணவு வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை சேரிங்கிராஸ் பகுதியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பெண்கள் உட்பட 237 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால், சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் 2-வது நாளாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் - பல்லடம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
