கோவை : விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் போலீசாருடன் நடந்த வாக்குவாதம் தொடர்பான விவகாரம் குறித்து பா.ஜ.க. தேசிய தலைவர் எச்.ராஜா கோவையில் விளக்கம் அளித்துள்ளார்.

கோவை பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் பேசியதாவது :- சபரிமலை விவகாரத்தில் தீர்ப்பை அமல்படுத்துவதாகக் கூறி இந்துகளுக்கு எதிரான யுத்தத்தை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்து இருக்கின்றார். கேரளாவில் சிரியன் சர்ச் தொடர்பான விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை இதுவரை கேரள அரசு நிறைவேற்றவில்லை. மசூதிகளில் கூம்பு வடிவ ஆம்ளிஃபயர் வைக்கக் கூடாது என்று தீர்ப்பு இருந்தும், அதை அமல்படுத்தவில்லை. பினராயி விஜயன் கம்யூனிஸ்ட் கட்சியின் கடைசி முதலமைச்சராக கேரளாவில் இருப்பார். பாரத தேசத்தில் அர்பன் நக்சல் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
பாலின சமத்துவம் பேசி ஐயப்பன் கோவிலை கண்காட்சி மையமாக மாற்ற கேரள அரசு முயல்கின்றது. நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கக் கூடாது என யாரும் சொல்ல முடியாது. ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முயன்ற ரெஹானா, 18 ஆண்களோடு ப்ளு பிலிம்மில் நடித்தவர். கிறிஸ்தவ, இஸ்லாமிய பெண்களை பக்தர்கள் எனக் கூறி நுழைய வைக்கப் பார்க்கின்றது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் சசிதரூர் தனிப்பட்ட முறையில் நாகரிகமில்லாத நபர். அவர் பிரதமர் மோடியைப் பற்றி விமர்சனம் செய்து இருப்பதைக் கண்டிக்கின்றேன்.
சபரிமலைக்கு செல்ல முயன்ற ரெஹானா இந்து மதம் மாறியதாக சொல்லப்படுவது தவறான தகவலாகும். அவரை இஸ்லாம் மதத்தில் இருந்து மத தலைவர்களே நீக்கி அறிக்கைவிட்டு இருக்கின்றனர். அதுபோல, சபரிமலை வழக்கு ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த வழக்கு என்ற தவறான தகவலை பினராயி விஜயன் சொல்லி வருகின்றார். பா.ஜ.க. எப்போதும் இடைத்தேர்தலுக்கு தயாராக இருக்கின்றது. நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தினால்தான் ஊழலை தடுக்க முடியும். வரும் மார்ச் மாதத்திலேயே நாடாளுமன்ற தேர்தல் நடத்த வாய்ப்பிருக்கின்றது.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது உயர்நீதிமன்றம் குறித்து போலீசாருடன் நடந்த வாக்குவாதம் தொடர்பான விவகாரத்தில், அது என்னுடைய குரல் இல்லை என எங்கும் சொல்லவே இல்லை. குரல் எடிட் செய்யப்பட்டது என்று மட்டுமே சொன்னேன். காவல்துறை அதை எடிட் பண்ணியிருக்கலாம். காவல்துறைதான் வீடியோ பதிவு செய்தது.
ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போது ராமர் கோவில் விவகாரம் பேசப்படுகிறது என்பது தவறு. நீதித்துறையில் ஏற்படும் காலதாமதம் காரணமாகவே தற்போது தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் பேசப்பட்டாலும், அதற்கு இந்துக்கள் காரணமல்ல, இவ்வாறு அவர் கூறினார்.