கோவையில் கல்லூரி மாணவர்கள் நடத்திய 'ஊழல் விழிப்புணர்வு பேரணி'

கோவை : ஊழல் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கல்லூரி மாணவர்களின் சார்பில் 'ஊழல் விழிப்புணர்வு பேரணி' நடைபெற்றது


கோவை : ஊழல் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கல்லூரி மாணவர்களின் சார்பில் 'ஊழல் விழிப்புணர்வு பேரணி' நடைபெற்றது. 

சர்தார் வல்லபாய் படேல் மேலாண்மை கல்லூரியும், கோவை வேலை வாய்ப்பு அலுவலகமும் இணைந்து நடத்திய இந்த ஊழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில், அலுவலக ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும், ஊழல் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு வழங்க சிறப்பு விருந்தினராக கோவை ஊழல்தடுப்புப் பிரிவு காவல்துறை ஆய்வாளர் ஜி. ஆறுமுகம் கலந்து கொண்டார். 



விழாவிற்கு சர்தார் வல்லபாய் படேல் மேலாண்மை கல்லூரியின் இயக்குநர் டி. ரமேஷ்குமார் மற்றும் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இணை இயக்குநர் ஏ. ஜோதிமணி ஆகியோர் இவ்விழாவிற்கு தலைமை தாங்கினர். 



பின்னர், பேசிய ஆய்வாளர் ஜி. ஆறுமுகம், தங்களுடைய அலுவலக பணி குறித்தும், ஊழல் ஒழிப்பு தொடர்பான தங்கள் செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும், மக்களுடனான கேள்வி-பதில் உரையாடலும் நடைபெற்றது. அவர் ஊழல் தொடர்பான எந்தப் புகாரையும் சந்தேகங்களையும் தன்னிடம் நேரடியாகக் கூறலாம் என்று கூறினார். இதன் தொடர்ச்சியாக, சர்தார் வல்லபாய் படேல் மேலாண்மை கல்லூரி மாணவர்கள் ஊழல் விழிப்புணர்வு நிகழ்வாக ஊமை நாடகம் மற்றும் நடனம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தினர். 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...