கோவை : கோவை மத்திய ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் ரயில்களில் பட்டாசு எடுத்து செல்லக்கூடாது எனவும், அவ்வாறு எடுத்து சென்றால் ரூ. 2,000 வரை அபராதம் விதிக்கப்படும் என கோவை ரயில் நிலைய காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கக்கூடிய தொழில்நகரமான கோவையில், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கோவை ரயில் நிலையத்தில் இருந்து சென்னை, சேலம், நகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், கர்நாடக, டெல்லி, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் ரயில்கள் செல்கின்றன. இதில், தினமும் சுமார் 1,25,000 பயணிகள் வந்து செல்கின்றனர்.

இதனிடையே, தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்ல, மற்ற மாவட்டங்களில் இருந்து கோவை திரும்ப ரயில்நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். இதனால், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும் கோவை ரயில்நிலைய காவல்துறை பல்வேறு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து கோவை சரக ரயில்வே காவல்துறை ஆய்வாளர் லாரன்ஸ் நம்மிடம் கூறுகையில், "பயணிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்த நுழைவு வாயிலில் 3 மெட்டல் டிடெக்டர்கள் மூலம் பரிசோதனை செய்யப்படுகின்றன. பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் எடுத்துச் செல்கின்றனவா..? என சோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஒரு காவல் ஆய்வாளர், மூன்று உதவி காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 25 ரயில்வே காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலையும் கட்டுப்படுத்த முழு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில்நிலைய குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு மையம் 24 மணி நேரமும் செயல்படுகின்றன. விதிமுறைகளை மீறி பட்டாசு எடுத்துச் சென்றால் ரூ. 1,000 முதல் ரூ. 2,000 வரை அபராதம் விதிக்கப்படும்," என்றார்.