கோவை : ஆனைகட்டியில் அதிக விலைக்கு மது விற்பனை செய்த மதுக்கடையை வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பரப்பிய இளைஞர்களை அடித்து உதைத்த பார் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பழங்குடியினத்தவர்கள் புகார் அளித்துள்ளனர்.

ஆனைகட்டி பகுதியான தமிழக - கேரள எல்லைப் பகுதியில் செயல்பட்டு வந்த மதுபானக்கடை பழங்குடியின மக்களின் போராட்டத்தால் மூடப்பட்டது. அதேபோல, கேரளா பகுதியில் மதுபானத்திற்கு தடை இருப்பதால் அனைவரும் குறிப்பாக பழங்குடியின மக்கள் இந்த ஆனைகட்டி பாருக்கு தான் வந்து கொண்டிருந்தனர். பின்னர், இந்த கடை மூடப்பட்டதை அடுத்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு உரிமம் இல்லாமல் அரசு மதுபானக் கடை ஜம்புகண்டியில் திறக்கப்பட்டுள்ளது.

புதிதாக தொடங்கப்பட்ட இந்த கடையில் அரசு அறிவித்த விலையை விட மதுக்களின் விலை ரூ. 50 வரை அதிகமாக விற்கப்படுகிறது. இதுதொடர்பாக, அந்தப் பகுதியில் உள்ள பழங்குடியின இளைஞர்கள், ஏற்கனவே ஏன் அதிக விலைக்கு விற்பனை செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு வாக்குவாதம் நிலவியது. அதேபோல, அதிக விலைக்கு விற்பதை அந்தப் பகுதி இளைஞர்கள் சிலர் வீடியோக்கள் எடுத்து சமூகவலை தளங்களில் பரவச் செய்தனர்.
இந்த நிலையில், நேற்று ஆனைகட்டி ஜம்புகண்டியில் அரசு உரிமம் இல்லாமல் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானம் கடையில் அதிக விலைக்கு சரக்கு விற்பனை செய்வது மற்றும் இரவு 10 மணிக்கு மேல் பிளாக்கில் விற்பதைக் கண்டித்து இரவு 10:15 மணிக்கு பழங்குடியினர் இளைஞர்கள் அந்தக் கடைக்கு சென்று முறையிட்டனர். அப்போது, சம்பந்தம்பட்ட டாஸ்மாக் மதுபானம் கடை உரிமையாளர், பாரில் வேலை செய்பவர்கள் நடராஜ் மற்றும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் அந்த இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இரும்பு பைப், கம்பி, உருட்டுக்கட்டை ஆகியவற்றால் தாக்கியதில் பழங்குடியின இளைஞர்களான முத்துகுமார், செந்தில், மூர்த்தி, கவுதம் ராஜா ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பழங்குடியினர்கள் டாஸ்மார்க் கடை உரிமையாளர் மற்றும் அந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதேபோல, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் இந்த மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.