நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு போராட்டம் நடத்த அனுமதி அளிக்காததால் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டவர்ளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு போராட்டம் நடத்த அனுமதி அளிக்காததால் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டவர்ளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் வரி உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்திற்குக் காவல்துறை அனுமதி மறுத்தனர்.
தொடர்ந்து, இன்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து காவல் துறைக்கு எதிராக மனு கொடுக்க முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் மாவட்ட ஆட்சியரின் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி காவல் வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர் இதனால் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.