கோவை : 4ஜி சேவை மற்றும் 12 ஆண்டுகால ஊதிய உயர்வு உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வழங்காத மத்திய அரசைக் கண்டித்து நாளை முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பி.எஸ்.என்.எல்., அனைத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளனர்.

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 12 ஆண்டுகள் ஆகியும் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. தனியார் தொலை தொடர்புக்கு இணையான சேவையை வழங்க 4ஜி அலைக்கற்றைக்கான ஸ்பெக்ட்ரத்தை அரசு வழங்காமல் இழுத்தடித்து வருகிறது. மேலும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு உண்டான முறையான பென்சனை உயர்த்தி தராமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதாகவும், 30% பென்சனுக்கு பணம் பிடிக்கப்பட்டும் 18% வரைதான் வழங்குவதாக குற்றம்சாட்டினர்.
இதனிடையே, பி.எஸ்.என்.எல்., ஊழியர்களின் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹாவை கடந்த பிப்ரவரி 24-ம் தேதி சந்தித்து தொழிற்சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர். அப்போது, கோரிக்கைகளை
நிறைவேற்றுவதாக உறுதியளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை தொலைத்தொடர்பு செயலர் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருவதாக பி.எஸ்.என்.எல்., அனைத்து தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், 4ஜி சேவை மற்றும் 12 ஆண்டுகால ஊதிய உயர்வு உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வழங்காததைக் கண்டித்து நாளை இந்தியா முழுவதும் தர்ணா போராட்டமும், வருகின்ற 14-ம் தேதி பேரணியும் நடைபெற இருப்பதாக பி.எஸ்.என்.எல்., அனைத்து தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், கோரிக்கைகளை நிறைவேற்ற வரும் 30-ம் தேதி வரை மத்திய அரசுக்கு கெடு விதித்திருப்பதாக அனைத்து பி.எஸ்.என்.எல். தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் பாபு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.