கோவை: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்-ஐ கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
கோவை : பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்-ஐ கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.
கோவை வந்த அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை மாநரகாட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் மற்றும் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் துரை ரவிச்சந்திரன் ஆகியோர் ஆளுநருக்கு புத்தகம் மற்றும் பூங்கொத்து அளித்து வரவேற்றனர்.
தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்து திருச்சி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் பங்கேற்கிறார்..
பின்னர், மாலையில், அவினாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றிலும், கொடீசியா அரங்கில் நிகழும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். பின்னர் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.