கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பரிசோதனை செய்ய மறுப்பு; ஞாயிற்றுக்கிழமைகளில் அறிவிக்கப்படாத விடுமுறையா?

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பிற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பரிசோதனை செய்ய மறுப்பு தெரிவித்ததையடுத்து பாதிக்கப்பட்டவர் மருத்துவ கல்வி இயக்குனருக்கு புகார் தெரிவித்த பின் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பிற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பரிசோதனை செய்ய மறுப்பு தெரிவித்ததையடுத்து பாதிக்கப்பட்டவர் மருத்துவ கல்வி இயக்குனருக்கு புகார் தெரிவித்த பின் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

கோவை, திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், கோவை அரசு மருத்துவமனைக்குக் காய்ச்சல் பாதிப்பிற்கு என சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காய்ச்சல் பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து சிறப்பு வார்டு, கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 



இந்நிலையில், நேற்று வடவள்ளியை சேர்ந்த பெண் ஒருவர் காய்ச்சல் பாதிப்பின் காரணமாக கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தார். புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர் ஆலோசனை வழங்கி ரத்த பரிசோதனை எடுக்க அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து 102-வது வார்டில் ரத்த பரிசோதனை செய்ய நோயாளி சென்றார்.

ஆனால், அங்கு ரத்த பரிசோதனை இன்று செய்ய முடியாது. நாளை வாருங்கள் என தெரிவித்தனர். பலருக்கும் இதே பதிலை பணியில் இருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். ரத்த பரிசோதனை செய்யும் இடம் திறக்கப்படாமல் பூட்டிக்கிடந்தது.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளிக்க நோயாளிகள் முயற்சி செய்தனர். ஆனால், நேற்று நிர்வாகத் தரப்பில் யாரும் இல்லாததால் நோயாளிகள் சென்னை மருத்துவ கல்வி இயக்குனரிடம் போனில் தொடர்பு கொண்டு புகார் அளித்தனர்.

அப்போது, காய்ச்சல் பாதிப்பு என்றால் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும் என கூறினார்கள். மருத்துவமனைக்கு வந்தால் முறையாக சிகிச்சை அளிக்காமல் ஞாயிற்றுக்கிழமை என கூறுகின்றனர். ரத்த பரிசோதனை செய்ய மறுப்பு தெரிவிக்கின்றனர் என புகார் தெரிவித்தனர்.

இந்த புகாரை தொடர்ந்து மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ உடனடியாக கோவை அரசு மருத்துவமனை நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். மேலும், ரத்த பரிசோதனை செய்ய அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து, 11 மணியளவில் ரத்த பரிசோதனை மையம் திறக்கப்பட்டு நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், மருத்துவமனையின் டீன் மருத்துவமனைக்கு வந்து சம்பவம் தொடர்பாக கேட்டறிந்தார். பின்னர், டெங்கு வார்டு, காய்ச்சல் வார்டுகளில் ஆய்வு நடத்தினார்.

கோவை அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த பரிசோதனை வார்டில் ஏற்கனவே நோயாளிகளிடம் முறையாக நடந்து கொள்வதில்லை எனவும் அங்கு இருக்கும் இருக்கும் பணியாளர்கள் செல்போன்களை நோண்டிக்கொண்டு அரட்டை அடித்துக் கொண்டும் பொதுமக்களிடம் முகம் சுளிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர் எனவும் ஏற்கனவே புகார்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் மீண்டும் அங்கு எழும் பிரச்சினைகளை மருத்துவமனை நிர்வாகம் உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...