ஆடிட்டர் குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி : ஆடிட்டர் குருமூர்த்தி மீது உயர்நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக ஆர்வலர் கவுதம் நவாஸ்கானுக்கு ஜாமீன் வழங்கியது தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரை விமர்சித்து ஆடிட்டரும், துக்ளக் இதழ் ஆசிரியருமான குருமூர்த்தி டிவிட்டரில் கருத்துப்பதிவு செய்திருந்தார்.
அதில், நீதிபதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்நோக்கம் புகுத்தி கருத்து கூறினார். இதை அறிந்த டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, குருமூர்த்தி மீது உயர்நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், அவர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் உயர் நீதிமன்றம் குறித்து இழிவாக கருத்து கூறிய, பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா, நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.