நீலகிரி : கரூரை சார்ந்த ராஜேஷ்குமார் என்பவர் கோத்தகிரியை சார்ந்த லோகேஸ்வரியை திருமணம் செய்துள்ளார். கடந்த 5 ஆண்டுக்கு முன்பு திருமணம் ஆன இவர்களுக்கு கார்த்திகேயன் என்ற மூன்றரை வயது மகன் உள்ளார்.
நீலகிரி : கரூரை சார்ந்த ராஜேஷ்குமார் என்பவர் கோத்தகிரியை சார்ந்த லோகேஸ்வரியை திருமணம் செய்துள்ளார். கடந்த 5 ஆண்டுக்கு முன்பு திருமணம் ஆன இவர்களுக்கு கார்த்திகேயன் என்ற மூன்றரை வயது மகன் உள்ளார்.
தற்போது ராஜேஷ்குமார் சௌதியில் பணி புரிந்து வருகிறார். இதனால் லோகேஸ்வரியும், மகன் கார்த்திகேயனும் கோத்தகிரியில் உள்ள ரோஸ் காட்டேஜ் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர். அவர்கள் இருவரையும் லோகேஸ்வரியின் பெற்றோர்கள் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை வந்து பார்த்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது.
இந்த நிலையில், இரவு லோகேஸ்வரியை பார்க்க அவரது பெற்றோர் வந்துள்ளனர். அப்போது வீட்டின் முன்புற கதவு பூட்டப்பட்டு இருப்பதை கண்ட அவர்கள் சந்தேகமடைந்து பின்புறம் சென்று பார்த்தனர். அப்போது லோகேஸ்வரி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதையும், பேரன் கார்த்திகேயன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக கோத்தகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் சிறுவனை மீட்டு சிகிச்சைகாக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த லோகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கோத்தகிரி போலீசார் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.