நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள அரசின் பழம் பதனிடும் நிலையத்தில் தீபாவளி விடுமுறைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்காக ஜாம் மற்றும் 2.5 டன் அளவுக்கு, ஜாதிக்காய் ஊறுகாய் மற்றும் ஜெல்லி தயாரிக்கும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

நீலகிரி மாவட்டம், குன்னூர் பர்லியாரில் உள்ள, 120 மரங்களில் ஜாதிக்காய் அதிகளவில் விளைந்துள்ளது.
மருத்துவ குணம் வாய்ந்த இந்த காயின் தோலில் ஊறுகாய், ஜெல்லியும், இதன் விதையில், வயிற்றுப்போக்கு மருந்தும், சிவப்பு நிற பத்திரியில், பீடா மற்றும் உணவுப் பொருட்களுக்கான வாசனைப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன.
ஜாதிக்காயின் தோல் பகுதி, நீராவியின் மூலம் ஜெல்லியாக தயாரிக்கப்படுகிறது. இந்த ஜெல்லி இனிப்பாக இருப்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்புகின்றனர்.
இவை தோட்டக்கலைத் துறையின் விற்பனை மையங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறன. தற்போது, குன்னூர் பழவியல் நிலையத்தில், இதன் தயாரிப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இது குறித்து தோட்டக்கலைத்துறையினர் கூறுகையில், "ஜாதிக்காய்கள் பறிக்கப்பட்ட, 3 நாட்களுக்குள் இவற்றை தயாரிக்க வேண்டும். தற்போது, 2.5 டன் அளவிற்கு ஊறுகாய், ஜெல்லி ஆகியவற்றை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை, 500 கிலோ ஊறுகாயும், 250 கிலோ ஜெல்லியும் தயாரிக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளன. விற்பனைக்கு ஏற்றவாறு அவற்றின் உற்பத்தி அதிகரிக்கப்படும்."என்றனர்.