கோவை: மேட்டுப்பாளையத்தை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமிநாயக்கன்பாளையத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் தாஸ் என்பவரின் மகன் பிரவின் தாஸ்.

இவர் மீது செயின் பறிப்பு, விபச்சார அழகிகளை மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
கோவை மாவட்டம் மட்டுமின்றி நீலகிரி மாவட்டத்திலும், பிரவின் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்திலும் பிரவின் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பிரவின் சர்ச்சுக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து கிளம்பி அருகிலுள்ள மகாலட்சுமி கோவில் அருகே வந்தபோது, 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் பிரவினை அங்கு வழி மறித்தனர்.
பின்னர் அவர்கள் திடீரென தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் பிரவினை முதுகு மற்றும் தலையில் வெட்டி அங்குள்ள சாக்கடையில் தள்ளி விட்டு உடனடியாக தப்பி சென்றனர்.
இதில் சம்பவ இடத்திலேயே பிரவின் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பிரவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பல்வேறு வழக்குகள் இவர் மீது உள்ளதால் முன் விரோதம் காரணமாக பிரவின் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பாண்டியராஜன் சம்பவ இட்த்திற்கு சென்று நேரடியாக விசாரணையில் ஈடுபட்டார்.
கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.