கோத்தகிரி அருகே பன்றி காய்ச்சலுக்கு ஒருவர் பலி: மக்கள் அச்சம்

நீலகிரி: கோத்தகிரி பகுதியில் பன்றி காய்ச்சலுக்கு வியாபாரி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சப்பட வைத்துள்ளது.


நீலகிரி: கோத்தகிரி பகுதியில் பன்றி காய்ச்சலுக்கு வியாபாரி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சப்பட வைத்துள்ளது.



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே எஸ். கைகாட்டி பகுதியை சேர்ந்த ரபீக் (40) என்பவர் மளிகை மற்றும் செல்போன் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக இவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது.

தொடர்ந்து அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பதாக தெரியவந்ததைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கெடுக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். பன்றி காய்ச்சலுக்கு ஒருவர் உயிரிழந்த சம்பவம் கோத்தகிரி பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...