திருப்பூர்: தமிழகம் முழுவதும் பரவி வரும் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலை தடுக்கும் வகையில் மாநகரப்பகுதிகள் மற்றும் ஊரகப்பகுதிகளில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் தடுப்பு மருந்து வழங்கும் விதமாகவும் மருத்துவ உதவி வாகனங்களை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை.கே.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், "தமிழகம் முழுவதும் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் மருத்துவ முகாமினை சுகாதாரத்துறை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

கோமாரி நோய்த்தடுப்பு மருந்து தமிழகம் முழுவதும் கால்நடைகளுக்கு வழங்கப்பட்டு வந்தது.

இருப்பினும் அண்டை மாநிலங்களில் இருந்து வந்த கால்நடைகளால் ஓசூர் பகுதிகளில் சில கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.
அண்டை மாநிலங்களில் இருந்து வரும் கால்நடைகளையும் இனி பரிசோதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாரத்திற்குள் 814 கால்நடை மருத்துவர்கள் கால்நடை மருத்துவமனைகளில் நியமிக்கப்படுவார்கள்." என்றார்.