கோவை: மேட்டுப்பாளையம் பகுதிகளில் கடந்த தென் மேற்கு பருவ மழை அதிக அளவில் பெய்த காரணத்தால் பில்லூர் அணை மூன்று முறைக்கு மேல் நிரம்பியது.

இதன் காரணமாக அணையின் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. அவ்வாறு வெளியேற்றப்பட்ட உபரி நீரால் பவானி சாகர் அணையும் முழு கொள்ளவை எட்டியது.
இதனால் பவானி சாகர் அணையில் தண்ணீர் 105 அடி தேக்கப்பட்டதால் சிறுமுகை லிங்காபுரம் அருகே காந்தையாறு பாலம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியது.
இதனால் லிங்காபுரம், காந்தவயல், உளியூர் போன்ற கிராமங்கள் போக்குவரத்து முழுவதும் துண்டிக்கப்பட்டது.
எனவே கரைக்கு அப்பால் இருந்த பொது மக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் என அனைவரும் பரிசலில் பயணித்து சென்று வரும் நிலை கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக உள்ளது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு காந்தவயல் பகுதியில் வசிக்கும் நஞ்சப்பன் மனைவி கவிதா என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தொடர்பு கொண்டு உதவிக்கு அழைத்தனர்.
அதன்பேரில் 108 குழுவினை சேர்ந்த நந்தகோபால், ரோஜா, அருண், வினோ, சுந்தரவேல் ஆகியோர் அங்கு சென்றனர்.
ஆனால் அந்த கிராமம் செல்ல தண்ணீர் சூழ்ந்து வழியில்லாத காரணத்தால் ஜந்து கிலோ மீட்டர் வனப்பகுதியில் பயணித்து மாற்று வழியில் செல்ல வேண்டிய நிலையில் இருந்தது.
இதனால் இரண்டு வாகனத்தில் ஊழியர்கள் சாதுரியமாக திட்டமிட்டு ஒரு வாகனத்தை கரையிலேயே நிறுத்திவிட்டு பரிசலில் பயணித்து காந்தவயல் சென்றனர்.
அங்கு பிரசவ வலியால் இருந்த கவிதாவுக்கு சிகிச்சை அளித்து பிரசவம் பார்த்தனர்.
இதனை அடுத்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தைக்கு உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டு உடல் நிலை மோசமானது.
மேலும் தாய் கவிதாவுக்கு அதிக ரத்த போக்கு ஏற்பட்டது இதனை அடுத்து 108 ஊழியர்கள் ஒரு குழுவினர் குழந்தையை எடுத்துக் கொண்டு பரிசலில் பயணித்து கரையில் நிறுத்தபட்டிருந்த 108 வாகனத்தில் ஏற்றி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று குழந்தையை காப்பாற்றினர்.
மற்றொரு வாகனத்தை 5 கிலோ மீட்டர் வனப்பகுதியில் உள்ள மாற்று பாதையில் இயக்கி தாயையும் கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.
தற்போது தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர். தாய் கவிதா டி.பி நோய்க்கு சிகிச்சை எடுத்து வருவதால் தற்போது கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தண்ணீர் சூழ்ந்து தீவுபோல காட்சி அளித்து ஊருக்குள் வாகனமே செல்ல முடியாத நிலையில் இருக்கும் காந்தவயல் பகுதிக்கு பரிசலில் பயணித்து பிரசவம் பார்த்து தாயையும் சேயையும் காப்பாற்றிய 108 ஊழியர்களை கிராம மக்கள் பாராட்டினர்.