திருப்பூர்: தீபாவளி தினத்தின் போது தொழிலாளர்கள் தொடர் விடுமுறை எடுத்தால் உற்பத்தி பாதிக்கப்பட்டு, அதனால், காண்டிரேக்ட் பாதிக்கப்படும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜா.எம்.சண்முகம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:-
தீபாவளிக்குப்பிறகு தொழிலாளர்கள் தொடர் விடுமுறை எடுப்பதால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து குழு ஒன்று ஆலோசனை மேற்கொண்டது.
அதன்படி, உற்பத்தி பாதிப்பு மற்றும் கால தாமத்தால் பல்வேறு நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் பாதிக்கப்படுவதாக தெரிகிறது.
இது நிதி அடிப்படையில் பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கும். இது நமது போட்டி நாடுகளுக்கு லாபத்தை ஏற்படுத்தும்.
அனைத்து ஏற்றுமதி நிறுவனங்களும் தங்கள் தொழிலாளர்களுக்கு இந்த நிலையை தெரிவிக்க வேண்டும்.
தீபாவளியைத் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கூட தொழிலை பாதிக்கும் என்ற தகவலை பரப்ப வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.