கோவையில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவை : பயணிகள் வரவேற்பு

கோவை : பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் இணைப்பு விமானங்களுக்கு ஏற்றவாறு, கோவையில் இருந்து டெல்லிக்கு நேரடி விமானசேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கோவை : பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் இணைப்பு விமானங்களுக்கு ஏற்றவாறு, கோவையில் இருந்து டெல்லிக்கு நேரடி விமானசேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கோவை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்லும் விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் கோவை கொங்கு குளோபல் ஃபார்ம் மற்றும் சிஐஐ கோவை, சீமா, கொடிசியா ஆகிய நிறுவனங்கள் சார்பில் மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில், கோவையில் இருந்து டெல்லிக்கு நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது கோவை மக்களுக்குக் கிடைத்த மேலும் ஒரு வரப்பிரசாதம் ஆகும். 

ஏர் இந்தியா நிறுவனம் இந்த சேவையை வழங்கி வருகிறது. அதாவது, வரும் நவம்பர் 30-ம் தேதி முதல் நள்ளிரவில் கோவையில் இருந்து புறப்பட்டு, அதிகாலை 05.30 மணிக்கு டெல்லியை சென்றடையும் வகையில் பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நாட்டின் வட மற்றும் கிழக்கு பகுதிகளில் இருக்கும் 33 இடங்களுக்குச் செல்லும் இணைப்பு விமானங்களைப் பிடிக்க முடியும். மேலும், 09.30 மணிக்கு அந்த நகரங்களுக்குச் சென்றடையலாம்.

இந்த விமானத்தில் பயணிக்க 15 நாட்களுக்கு முன்னதாக டிக்கெட் முன்பதிவு செய்தால், கோவையில் இருந்து டெல்லிக்கு ரூ.2,944-ம், டெல்லியில் இருந்து கோவைக்கு ரூ. 2,971-ம் கட்டணமாக வசூலிக்கப்படும். அதுமட்டுமில்லாமல், 25 கிலோ எடையளவிற்கு பயண உடைமைகளை எடுத்துச் செல்லலாம். எக்ஸ்டிரா லெக்ரூம், உணவு, சரியான இணைப்பு போன்ற வசதிகளைப் பெறலாம்.

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கோவையில் இருந்து டெல்லி சென்று வர ரூ.18,000 கட்டணத்தை பயணிகள் செலவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...