கோவையில் ஜெட் ஏர்வேஸ் சார்பில் 3 தங்கிச் செல்லும் விமானங்கள் இயக்கம்

கோவை : கோவை சர்வதேச விமான நிலையத்தில் தங்கி செல்லும் வகையிலான 3 விமானங்களை இயக்க ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கோவை : கோவை சர்வதேச விமான நிலையத்தில் தங்கி செல்லும் வகையிலான 3 விமானங்களை இயக்க ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

கோவை சர்வதேச விமான நிலையத்தில் நாளை முதல் ஜெட் ஏர்வெஸுக்கு சொந்தமான 3 விமானங்கள் தங்கி செல்லும் வகையிலான சேவையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாள்தோறும் நாட்டில் உள்ள 6 மெட்ரோ நகரங்கள் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் 8 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம், தினந்தோறும் 3,000 பேர் பயணிக்க முடியும். மேலும், பயணத்தில் சில சலுகைகளையும் பெறும் வாய்ப்பு பயணிகளுக்கு கிடைத்துள்ளது. 

கோவை விமான நிலையத்தில் இருந்து பெங்களூரூவிற்கு காலை 05.30 மணிக்கும், சென்னைக்கு 07.00 மணிக்கும், டெல்லிக்கு 05.50 மணிக்கும், ஐதராபத்திற்கு பிற்பகல் 02.25 மணிக்கும், மும்பைக்கு 09.10 மணி, பிற்பகல் 02.25 மணி, இரவு 08.45, புனேவிற்கு பிற்பகல் 02.40 மணிக்கும் இயக்கப்படுகிறது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இந்த முடிவுக்கு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த விமானப் பயணிகள் மற்றும் தொழில்நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. 

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...