கோவை : அவினாசி - அத்திக்கடவு திட்டத்திற்கு விரைவில் ஒப்பந்தம் கோரப்பட இருப்பதாக கோவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
கோவை : அவினாசி - அத்திக்கடவு திட்டத்திற்கு விரைவில் ஒப்பந்தம் கோரப்பட இருப்பதாக கோவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உக்கடம், வடவள்ளி உட்பட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அரசின் திட்டப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உடன் இருந்தார். ஆய்வுக்கு பின்னர் விருத்தினர் மாளிகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :- தமிழகத்தில் 20 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருக்கின்றது. இதற்கு தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தினால் அதை அ.தி.மு.க. எதிர்கொள்ளும். கூட்டுறவு சங்கத் தேர்தல் 90 சதவீதம் முடிந்து விட்டது. வழக்கு இருப்பதால் ஒரு சில இடங்களில் நடத்த முடியவில்லை. 18 எம்.எல்.ஏ.,க்களின் தீர்ப்பு, கெட்டவர்களுக்கும், துரோகிகளுக்கும் பாடமாக அமைந்திருக்கின்றது. முல்லை பெரியார் விவகாரம் தொடர்பாக பிரதமர், நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. கேரள அரசுக்கு எவ்வித அனுமதியும் கொடுக்கக் கூடாது என வலியுறுத்தி இருக்கின்றேன்.
ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு தயாராக இருக்கிறது. இடைமலையாறு அணை கட்டி முடித்தால்தான் ஆனைமலையாறு - நல்லாறு அணைகளைக் கட்ட முடியும். ஆனால், இடைமலையாறு அணையில் மீதமுள்ள 5 சதவீத பணிகளை முடிக்காமல் கேரள அரசு தாமதப்படுத்தி வருகின்றது. வேண்டுமென்றே திட்டமிட்டு கேரள அரசு காலம் தாழ்த்திக்கொண்டு இருக்கின்றது, என்றார்.
தர்மபுரி மாவட்டத்தில் புதிய அணை கட்ட வாய்ப்பிருப்பதாக விவசாயிகள் வலியுறுத்துவது தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளித்திருப்பதாவது :-
உச்சநீதிமன்ற தீர்ப்புபடி புதிய அணை கட்ட காவிரி தொடர்பான மாநிலங்கள் சம்மதிக்க வேண்டும். புதிய அணை கட்ட மற்ற மாநிலங்கள் சம்மதிக்குமா..? என்பது சந்தேகமே. அ.தி.மு.க.,விற்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்துக்கொண்டு இருக்கின்றனர்.
இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ஷேவை சர்வதேச போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என ஜெயலலிதா வலியுறுத்தினார். அவர் வழியில் இந்த அரசு செயல்படும். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் பாதிக்கப்படக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. இலங்கை அரசால் மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம், மீனவர் பிரச்சினைகள் மத்திய அரசின் கவனத்தில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எந்த துன்பம் வந்தாலும் அதை இந்த அரசு நிவர்த்தி செய்யும்.
கடந்த காலத்தை விட வனத்தில் விலங்குகள் அதிகமாகிவிட்டதனால், வனவிலங்கு - மனித மோதல்கள் அதிகமாகி இருக்கின்றது. விலங்குகள் மனிதர்கள் வாழும் பகுதிக்கு வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வனத்துறையில் உள்ள வேட்டைதடுப்பு காவலர்களுக்கு போதிய உதவிகள் செய்வது தொடர்பாக தமிழக அரசு பரீசிலிக்கும். தமிழக அரசைப் பொறுத்தவரை சத்துணவு மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் கணிவுடன் பரீசிலித்து வருகின்றது. நிதிநிலைக்கு ஏற்ப அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை எந்த அளவு நிறைவேற்றப்பட முடியுமோ, அதை இந்த அரசு செய்து வருகின்றது.
தீபாவளி பட்டாசு வெடிப்பது தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. அதில், தமிழக அரசு தலையிட முடியாது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுதான் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கின்றது. உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடங்கிய நிலையில், தி.மு.க. நீதிமன்றம் சென்றதால் அதை நடத்த முடியாமல் போனது. டி.டி.வி. தினகரன் 18 எம்.எல்.ஏ.க்களை காலி பண்ணிவிட்டார். அவர் ஒன்றும் மகான் அல்ல. பரபரப்பு செய்தி வேண்டும் என்பதால் தினகரன் விவகாரத்தை ஊடகங்கள் கிளப்புகின்றன
ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிறையில் உள்ள 7 தமிழர்களின் விடுதலை குறித்து ஆளுநருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. இதில் ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும். மேலும், கொங்கு மண்டல மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான, அவினாசி - அத்திக்கடவு திட்டத்திற்கு விரைவில் ஒப்பந்தம் கோரப்பட இருக்கிறது, இவ்வாறு அவர் கூறினார்.