நீலகிரி : நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவுப்படி, மாவட்ட நிர்வாகத்தினருடன் இணைந்து ஆதிவாசி மக்களுக்கான குறைதீர்ப்பு முகாம் பல்வேறு இடங்களில் இன்று நடத்தப்பட்டது.

நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட கூடலூர், மஞ்சூர், முள்ளி உள்ளிட்ட பகுதிகள் கேரள வனப்பகுதியை ஒட்டியுள்ளதால், இந்த வனப்பகுதிகளை பயன்படுத்தி மாவோயிஸ்ட்டுகள் நீலகிரிக்குள் நுழைவது வாடிக்கையாகிவிட்டது. அவ்வாறு உள்ளே நுழையும் மாவோயிஸ்ட்டுகள் பழங்குடியின மக்களின் கிராமங்களுக்குள் புகுந்து, அவர்களது இயக்கத்தில் பழங்குடியின மக்களை இணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுத்துவதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இதையடுத்து, மாவட்ட காவல்துறை சார்பில் பழங்குடியின கிராமங்களில் அவ்வப்போது, முகாம்கள் நடத்தி பழங்குடியின மக்களுக்கான மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை உதவிகளை செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நியூ ஹோப் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜ் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் அனைத்துத் துறையை சேர்ந்த அரசு ஊழியர்கள் பங்கு பெற்று குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது. இதில், ஓவேலி பகுதியில் இருந்து ஆண்கள், பெண்கள் என சுமார் 90 பேர் கலந்து கொண்டனர்.

அவர்களை கூடலூர் காவல்துறை துணை கண்காணி்பாளர் தேசிங் வரவேற்றார். இம்முகாமில் மாவட்ட சமூகநல துணை ஆட்சியர் கலந்து கொண்டு ஆதிவாசி மக்களிடம் மனுக்களைப் பெற்றார்.