கோவை : கோவை மாவட்டம் லாலி ரோடு பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, பெண்கள் ஆரத்தி எடுத்து பூரண கும்ப மரியாதை அளித்தனர்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட கவுண்டம்பாளையம், வடவள்ளி, வீரகேரளம் ஆகிய பகுதிகளுக்கு ரூ. 108.16 கோடியில் கட்டப்பட்டு வரும் குடிநீர் அபிவிருத்திட்ட பணிகளைப் பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றார். அப்போது, லாலி ரோடு, பி.என்.புதூர் ஆகிய இடங்களில் அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து பூரண கும்ப மரியாதை அளித்தனர்.

பின்னர், கோவை பி.என்.புதூர் பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது :- அ.தி.மு.க., ஆட்சிக்கு எதிராக எத்தனை சோதனை வந்தாலும், அத்தனையையும் தவிடு பொடியாக்குவோம். அம்மாவின் அரசு சிறந்த பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த ஆட்சியைக் கலைக்க நினைத்தவர்களுக்கு நல்ல தீர்ப்பு நீதிமன்றம் வாயிலாக கிடைத்துள்ளது. வேண்டுமென்றே இந்த அரசை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகிறார்கள்.
உயர்கல்வியில் இந்த அரசு பல நல்லதிட்டங்களைக் செயல்படுத்தி வருகிறது. பல கல்லூரிகளும் துவங்கப்பட்டு வருகின்றன. 36 லட்சம் பேருக்கு மடிக்கணினி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 14 லட்சம் பேருக்கு மடிகணனி கொடுக்க டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான கல்வியை ஏழை, எளிய மக்களுக்கு கொடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. நாம்தான் இப்படி மாறி விட்டோம், நம் பிள்ளைகள், எதிர்கால சந்ததியினர் நல்ல முறையில் கல்வி பெற வேண்டும் என்ற காரணத்திற்காக கல்வித்துறையில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்..
முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் பல்வேறு நபர்களுக்கு உயர்சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கோவை லாலி ரோடு பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும். இந்த ஆட்சி முழுமைபெறும். மக்களின் எண்ணங்களைச் செயல்படுத்தும் அரசாக இந்த அரசு உள்ளது, இவ்வாறு பேசினார்.
பின்னர், கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 16-ல் 162.65 சென்டில் அமைக்கப்பட்ட சூப்பர் கார்டன் அவின்யூ பூங்கா மற்றும் விளையாட்டு திடலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும், அங்கு புங்கமரத்தை நடவு செய்து தண்ணீர் ஊற்றினார்.
முன்னதாக, உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலக் கட்டுமானப் பணிகளை அவர் பார்வையிட்டார். அவருடன் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என பலர் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- நாடாளுமன்றத்தில் சிறுபான்மையினருக்கு குரல் கொடுத்த கட்சி அ.தி.மு.க.தான். கோவை மாநகரத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறித்த காலத்திற்கு முன்னதாகவே பாலப்பணிகள் நிறைவு பெறும். நாட்டிலேயே தமிழகம்தான் அமைதி பூங்காவாக உள்ளது. சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது, என்றார்.

பின்னர், கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ. 39.74 கோடி மதிப்பில் கோவையில் உள்ள குளங்களை மேம்படுத்தும் திட்டப் பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.