நீலகிரி : குன்னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் 72-வது ஆண்டு காலாட்படை தினம் இன்று கொண்டாடப்பட்டது.
நீலகிரி : குன்னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் 72-வது ஆண்டு காலாட்படை தினம் இன்று கொண்டாடப்பட்டது.

கடந்த 1947-ம் ஆண்டு, அக்டோபர் 27-ம் தேதி முதல் காலாட் படையினர் ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் எதிரிகளுடன் போரிட்டு காஷ்மீர் பள்ளத்தாக்கை மீட்டனர். காலாட்படையின் இந்த வீரச்செயலை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27-ம் தேதி இந்திய ராணுவத்தின் சார்பில் காலாட்படை தினம் கொண்டாடப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, காலாட்படைக்கு முக்கிய பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சார்பில் இன்று காலாட்படை தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, வெலிங்டன் போர் நினைவு சதுக்கத்தில், ராணுவ இசை முழங்க ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து, போரில் உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு எம்.ஆர்.சி. ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் பயிற்சி ராணுவ வீரர், ராணுவ வீரர், ஓய்வு பெற்ற ராணுவ வீரர், எம்.ஆர்.சி., கமாண்டென்ட் பிரிகேடியர் சங்வான், ராணுவ கல்லூரி முதன்மை கமாண்டென்ட்லெப்டினென்ட் ஜெனரல் அம்ரிக் சிங் ஆகியோர் போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து ராணுவ மரியாதை செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து, போரில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ராணுவ உயர் அதிகாரிகள், முன்னாள் ராணுவ உயர் அதிகாரிகள், ராணுவ வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டு போரில் வீரமரணடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.