கோவை: முன்விரோதம் காரணமாக துப்பாக்கியால் சுடப்பட்ட விவசாயி படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தமிழக, கேரள எல்லையோரத்தில் அமைந்துள்ள பில்லூர் அணைப்பகுதியில் உள்ள செங்கல்கோம்பை என்னும் மலைக்கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் தனது பகுதியில் வாழை விவசாயம் செய்து வந்த நிலையில், அருகில் உள்ள பகுதியில் விவசாயம் செய்து வரும் பொன்னுசாமி என்பவரோடு விவசாயம் தொடர்பான தகராறு ஏற்பட்டுள்ளது. பல நாட்களாக இப்பிரச்சனை இவர்களுக்கிடையே நீடித்து வந்தது. இந்த நிலையில், மோதல் முற்றி பொன்னுசாமி தன்னிடம் இருந்த இரட்டை குழல் நாட்டு துப்பாக்கியால் தங்கராஜை சுட்டுள்ளார். இதில், இரு கைகள் மற்றும் கால்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயமடைந்த தங்கராஜ் அங்கேயே சுருண்டு விழுந்துள்ளார்.
இதனையடுத்து, தங்கராஜின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் காயமடைந்த தங்கராஜை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குண்டுகள் பாய்ந்த நிலையில் இருந்த தங்கராஜிற்கு முதல் உதவி சிகிச்சையளிக்கப்பட்டு உடனடியாக கோவை அரசு பொது மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடிய பொன்னுசாமியை தேடி வருகின்றனர். ஏற்கனவே, பொன்னுசாமி மீது கள்ளவேட்டை உள்பட பல்வேறு குற்றவழக்குகள் உள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.