கோவை: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விமான நிலையத்தில் அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- சிறப்பாக, எழுச்சியாக தன்னை வரவேற்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்த நேரத்தில் மனமார, உளமாற நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கட்சியை உடைக்க வேண்டும், ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று எண்ணிய எதிரிகளுடைய எண்ணங்கள் தவிடு பொடியாகி ஆகிவிட்டது. எம்.ஜி.ஆர்., நாட்டு மக்கள் நலம் பெற வேண்டும், நாட்டு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்க வேண்டும், தமிழகத்திலே
வாழ்கின்ற மக்களது தேவைகளையும் பூர்த்தி ஆக வேண்டும் என்பதற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவர். அவரது மறைவிற்குப் பிறகு, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய இந்த இயக்கத்தை முடக்க பலர் முற்பட்டார்கள். ஆனால், எதிரிகளால் வெற்றி காண முடியவில்லை. ஏனெனில், புரட்சித்தலைவி அம்மா என்ற தெய்வத்தை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் கொடையாக விட்டுச் சென்றது தான். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் விட்டுச் சென்ற பணியை தொடர்ந்து செயலாற்றி, பேரறிஞர் அண்ணா கண்ட கனவை நனவாக்கி 6 முறை தமிழகத்தினுடைய முதலமைச்சராக மக்களின் மகத்தான ஆதரவைப் பெற்று சிறப்பான ஆட்சி செய்தார்.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சிலர் எதிரிகளோடு சேர்ந்து கொண்டு இந்த இயக்கத்தை உடைக்க முயற்சி செய்தார்கள். அதனை மக்களின் துணையோடு தவிடு பொடியாக்கியவர் ஜெயலலிதா. சதிகாரர்கள் எதிரியாய் இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தோடு துணை கொண்டு ஆட்சியை கலைக்கவும், இயக்கத்திற்கு இடையூறுகளையும் விளைவித்தார்கள். ஆனால், இந்த ஆட்சியை எந்தக் கொம்பனாலும் அகற்ற முடியாது என்பதை இறைவன் சார்பாக இருந்து நல்ல தீர்ப்பை நமக்குக் கொடுத்திருக்கின்றார்கள். ஆகவே, இந்த இயக்கத்தை உடைக்க முற்பட்டவர்களும், இந்த ஆட்சியைக் கவிழ்க்க முற்பட்டவர்களுக்கும் இறைவன் தகுந்த தண்டனையை இப்பொழுது வழங்கியிருக்கிறார்.
இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய இந்த இயக்கத்தை கட்டிக் காப்போம். அனைவரும் ஒன்றுபட்டு மக்களுக்கு நன்மை செய்ய பாடுபட வேண்டும். மேலும், அனைவரின் கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற விதமாக இந்த அரசு செயல்படும். மக்களின் எண்ணிய எண்ணங்கள் அத்தனையையும் நிறைவேற்றி கோவை மாநகர் ஒரு முதன்மை மாநகராக விளங்குவதற்கு அரசு துணை நின்று திட்டங்களையும் நிறைவேற்றுவதற்கு பாடுபடும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.