பொதுமக்களை நடுநடுங்க வைத்த 'ஹாரன்' : குன்னூரில் மினி பேருந்துகளுக்கு அபாரம் விதித்து அதிரடி

நீலகிரி : குன்னூரில் பொதுமக்களுக்கு இடையூறாக அதிக சத்தத்துடன் ஒலிப்பான்கள் வைத்து இயக்கிய மினி பேருந்துகளுக்கு ரூ. 40,000 அபராதம் விதிக்கப்பட்டது.

நீலகிரி : குன்னூரில் பொதுமக்களுக்கு இடையூறாக அதிக சத்தத்துடன் ஒலிப்பான்கள் வைத்து இயக்கிய மினி பேருந்துகளுக்கு ரூ. 40,000 அபராதம் விதிக்கப்பட்டது. 

நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஓடும் மினி பேருந்துகளில் பெரும்பாலான பேருந்துகளில் தடைசெய்யப்பட்ட ஒலிப்பான்கள் இருப்பதாகவும், இந்த ஒலிப்பான்களை மக்கள் கூடும் இடங்களில் அதிகளவில் பயன்படுத்துவதால் மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுவதாக பொதுமக்கள் தரப்பில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குப் புகார் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, குன்னூர் போக்குவரத்து ஆய்வாளர் முரளி மற்றும் சட்ட ஒழுங்கு ஆய்வாளர் சுப்ரமணி பரிந்துரையின் பேரில், குன்னூரில் இயங்கும் மினி பேருந்துகளில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நல்லதம்பி அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தடை செய்யப்பட்ட ஒலிப்பான்கள் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாத 8 மினி பேருந்துகளுக்கு தலா ரூ. 5,000 ரூபாய் வீதம் ரூ. 40 ஆயிரம் அபராதம் விதித்தார்.

 

இனிவரும் காலங்களில் மினி பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக் கூடிய ஒலிப்பான்களை பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். 

வட்டாரப் போக்குவரத்து அதிகாரியின் திடீர் ஆய்வு குறித்து முன்பே தெரிந்து கொண்ட மினி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பெரும்பாலான ஓட்டுநர்கள் தடைசெய்யப்பட்ட ஒலிப்பான்களை தாற்காலிகமாக கழற்றி வைத்து விட்டனர். எனவே, இனி வரும் காலங்களில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அடிக்கடி வந்து ஆய்வு செய்தால் மட்டுமே, இதுபோன்ற விதிமீறல்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் சுப்ரமணி மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரி ஆகியோரிடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர். 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...