நீலகிரி : உதகை தலையாட்டி மந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில், நீலகிரி மாவட்ட அ.தி.மு.க., இளைஞரணி செயலாளரின் சொந்த நிதியில் இருந்து ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கப்பட்டது.
நீலகிரி : உதகை தலையாட்டி மந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில், நீலகிரி மாவட்ட அ.தி.மு.க., இளைஞரணி செயலாளரின் சொந்த நிதியில் இருந்து ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் உதகை தலையாட்டு மந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில், உதகை நகராட்சியின் மூலம் இயங்கி வருகிறது. இந்தப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறையை தொடங்க கிராம மக்கள் முடிவெடுத்தனர். அதன்படி, நவீன பயிற்சியின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு எளிய முறையில் கல்வி கற்கவும், அடுத்த ஆண்டில் பள்ளி மாணவர் விழுக்காடு அதிகரிக்கப்பற்கான பணியினை மேற்கொள்ளவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த வகுப்பறையில் மாணவர்கள் அமர இருக்கைகள் இல்லாததால் சிறகுகள் அமைப்பினர் மற்றும் அ.தி.மு.க., இளைஞர் அணி மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் சார்பில் வகுப்பறைக்கு ரூ. 40,000 மதிப்பில் இருக்கைகள் மற்றும் மேசைகள் அளித்துள்ளனர்.

மேலும், பள்ளியின் வளர்ச்சி பணிகளுக்காக அ.தி.மு.க., உதகை நகர கழக செயலாளர் சண்முகம் ரூ. 5,000 அளித்துள்ளார். இந்த முன்மாதிரி பள்ளி இன்னும் பல இடங்களில் தொடங்கவுள்ளதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கூறினர்.