Exclusive : கோவையில் மாசுபாடில்லாத 'பசுமை தீபாவளி'யை பழங்குடியினத்தவருடன் கொண்டாடிய பள்ளிக் குழந்தைகள்

கோவை : தீபாவளி பண்டிகையின் போது மாசுபாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், கோவை மாவட்டத்தின் பழங்குடியின மக்களுடன் பள்ளிக் குழந்தைகள் 'பசுமை தீபாவளி'யைக் கொண்டாட முடிவு செய்துள்ளனர்.


கோவை : தீபாவளி பண்டிகையின் போது மாசுபாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், கோவை மாவட்டத்தின் பழங்குடியின மக்களுடன் பள்ளிக் குழந்தைகள் 'பசுமை தீபாவளி'யைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.



நாடு முழுவதும் வரும் நவ.,06-ம் தேதி தீபாவளிப் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட இருக்கிறது. பொதுவாக, தீபாவளி என்றாலே, அனைவருக்கும் ஞாபகம் வருவது பட்டாசு வெடிகளும், அதனால், ஏற்படும் புகையுமே ஆகும். இந்த நிலையில், பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் மாசுபாடுகளைத் தவிர்த்து தீபாவளிப் பண்டிகையை 'பசுமை தீபாவளி'யாகக் கொண்டாட கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழிற்நுட்பக் கல்லூரியின் ஈகை அமைப்பு முடிவு செய்தது.



அந்த வகையில், கொண்டனூர் பஞ்சாயத்துக்குட்பட்ட மத்திய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 100 மாணவர்களுடன், ஆனைகட்டி மலைப்பகுதியில் வாழும் பழங்குடியினருடன் இந்தப் பசுமை தீபாவளி கொண்டாடப்பட்டது. மாசுபாட்டைக் குறைக்கும் நோக்கில் மட்டுமே இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். 



"பசுமைப் புரட்சிக்காக வலியுறுத்தி இந்த 'பசுமை தீபாவளி'க்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனைகட்டி மலைப்பகுதியில் தொடர்ந்து 2-வது ஆண்டாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது," என்கிறார் ஈகை அமைப்பைச் சேர்ந்த எஸ். பிரபார்த்தா ரஞ்சன் குமார்.

பசுமை தீபாவளிக் கொண்டாட்டத்தின் போது மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் ஈகை அமைப்பினரால் நடத்தப்பட்டது.

ஈகை அமைப்பின் மாணவர் தலைவர் வி.கே. சந்தோஷ் கூறுகையில், "இக்கொண்டாட்டத்தையொட்டி விழா நடைபெறும் இடத்தில் தனி அரங்கு அமைக்கப்பட்டது. மேலும், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக கார் போன்ற ஃபிரேம்களில் புகைப்படங்கள் மற்றும் செல்பிக்கள் எடுக்கப்பட்டன. நகரில் இருக்கும் அனைத்து வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் கூடும் பகுதிகளிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட இருக்கின்றன." இவ்வாறு கூறினார். 



இதுபோன்ற நிகழ்ச்சிகள் மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் அதன் விளைவுகளை அவர்களுக்கு எடுத்துரைப்பதற்காகவே என்றும் அவர் தெரிவித்தார். மேலும், தூய்மையான காற்று, நீர் மற்றும் பசுமையான இயற்கைச் சூழல் போன்றவற்றை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்த முடியும் என்கின்றனர் ஈகை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள்.

மேலும், மரம் வளர்ப்பதன் முக்கியத்துவத்தை விளக்கிய ஈகை அமைப்பினர், விதை அடங்கிய பென்சிலை மாணவர்களுக்கு பரிசாக வழங்கினர். பென்சிலின் பயன்பாடு முடிந்த பிறகு, அதனை தூக்கி எரிந்தால், அந்த விதையின் மூலம் மரம் வளரும் முயற்சி உருவாக்க முடியும்.



பசுமை தீபாவளிக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, 100-க்கும் மேற்பட்ட ஹுலியம் பலூன்களை மாணவர்கள் வானில் பறக்க விட்டனர். மேலும், இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு பல்வேறு பரிசுகளும், உணவுகளும் வழங்கப்பட்டது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...