கோவையில் கொடிசியா பொன்விழா கொண்டாட்டம் : ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்கிறார்

கோவை : வரும் 29-ம் தேதி நடைபெற இருக்கும் கொடிசியா பொன்விழா ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்திராக கலந்து கொள்கிறார்.

கோவை : வரும் 29-ம் தேதி நடைபெற இருக்கும் கொடிசியா பொன்விழா ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்திராக கலந்து கொள்கிறார். 

கொடிசியா என்று அழைக்கப்படும் கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம், இந்த ஆண்டு பொன்விழா ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு, இதற்கான பொன்விழா ஆண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா வரும் 29-ம் தேதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் உள்ள ‘இ’ ஹாலில் நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விழாவிற்கு தலைமை தாங்குகிறார். 

இந்த நிகழ்ச்சி குறித்து கொடிசியா தலைவர் ஆர்.ராமமூர்த்தி, செயலாளர் தேவராஜ் பொன்விழா கமிட்டி தலைவர் பழனிசாமி ஆகியோர் கூறியதாவது :- கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்கம் எனும் கொடிசியா 1969-ம் ஆண்டு வரை சுமார் 28 ஆண்டுகள் கோவையின் தொழிற் பிதாமகர்களில் ஒருவரான ஜி.டி.நாயுடு மற்றும் அவரது புதல்வர் ஜி.டி.கோபால் ஆகியோரின் உதவியால், அவர்களின் பிரசிடெண்ட் ஹால் வளாகத்தில் இயங்கி வந்தது. அதன்பிறகு, கொடிசியா அலுவலகம் தனது சொந்த இடத்தில் இயங்கத் தொடங்கி “கொடிசியா ஜிடி நாயுடு டவர்ஸ்” என்று பெயர் சூட்டப்பட்டது. தற்போது, இந்தியாவில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான மிகப்பெரிய சங்கமாக கொடிசியா இயங்கி வருகிறது. 

பல்வேறு வகை சிறு தொழில் புரிவோர் இணைந்து மொத்தம் 6,604 உறுப்பினர்களாக உள்ளனர். இப்பகுதியின் தொழில், பொருளாதார வளர்ச்சி மற்றும் வளமாக எதிர்காலத்துக்காக, கொடிசியா சுயலாப நோக்கின்றி இயங்கி வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகளிலும், தேசிய சிறு, குறு, நடுத்தர தொழிலகங்களுக்கான தேசிய வாரியத்திலும் உள்ள பல்வேறு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் குழுக்களில் கொடிசியா உறுப்பினராக உள்ளது. இப்பகுதியின் தொழில் வளர்ச்சிக்கும் சிறு, குறு தொழில் முனைவோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் கொடிசியா பெரும்பங்காற்றி வருகிறது. 

தொழில் தொடர்பான கருத்தரங்குகள், பயிற்சி முகாம்கள், தொழில் சுற்றுலா, வெளிநாடுகளில் நடைபெறும் தொழில் கண்காட்சிகளுக்கு செல்லுதல், தொழில் பொருட்கள் உற்பத்தி செய்வோர் - வாங்குவோர் சந்திப்பு, ஏற்றுமதி - இறக்குமதி வழிகாட்டுதல் ஆகியவற்றை கொடிசியா ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. இப்பகுதியின் தொழில், வணிக மேம்பாட்டுக்கும், சிறு, குறு, நடுத்தர தொழிலகங்கள் நவீன தொழில் நுட்பங்களைப் பெறவும், தங்கள் திறனை வெளிக்காட்டவும் உதவும் வகையில் தொழிற் கண்காட்சிகளை நடத்துவதற்காக கொடிசியா தொழிற்காட்சி வளாகம் ஒன்றை கோவையில் கட்டியுள்ளது. இதில், இன்டெக் கண்காட்சி, அக்ரி இன்டெக்ஸ், பில்டு இன்டெக், எலக்ட்ரோடெக், கோயம்புத்தூர் ஷாப்பிங் பெஸ்டிவல், சப்கான், கோயம்புதூர் புத்தகத் திருவிழா போன்ற பல்துறை கண்காட்சிகளை கொடிசியா ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. 

இது தனது சிறப்புமிக்க சேவைக்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளது. மேலும், கோவை நகரத்துக்கு வெளியே இரண்டு இடங்களில் உலகத்தரம் வாய்ந்த இரண்டு தொழிற்பூங்காக்களை கொடிசியா தொழிற்பூங்கா என்ற பெயரில் உருவாக்கி வருகிறது. இது கிட்டத்தட்ட 400 சிறு, குறு தொழில்முனைவோர் பயனடையப் பேருதவி புரியும். இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் திட்டமான இன்னோவேஷன் பார் டிபன்ஸ் எக்சலன்ஸின் கீழ் கொடிசியா ராணுவ “இன்னோவேஷன்” சென்டர் நாட்டிலேயே முதல்முறையாக இங்கு அமைய உள்ளது. 

நாட்டின் மதிப்பு வாய்ந்த அந்நியச் செலாவணியை சேமிக்கும் வகையில், இறக்குமதிக்கு மாற்றாக உள்நாட்டு தயாரிப்பு திட்டங்களை இந்த மையத்தின் மூலம் கொடிசியா செயல்படுத்த உள்ளது. இப்பகுதியை ராணுவ தளவாட உற்பத்தி மையமாக விரைவில் உருவாக்கும் பணியில் கொடிசியா முன் நின்று செயல்படுகிறது. கொடிசியா தொழில்காட்சி வளாகத்தில் ஒரு கன்வென்ஷன் சென்டரை உருவாக்குவதற்கான செயல்திட்டத்தையும் சமர்ப்பித்துள்ளது. இந்த கன்வென்ஷன் சென்டர், 2,000 இருக்கைகள் கொண்ட கருத்தரங்கம் மற்றும் இப்பகுதியில் செயல்பட்டு வரும் சிறு, குறு, நடுத்தர தொழிலகங்களின் உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்துவதற்கான ஒரு நிரந்தர காட்சி மையம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். 

வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளிட்டவர்கள் ஒரே இடத்தில் அணுகும் மையமாக இது திகழ்வதால் நமது நாட்டின் பொருளாதாரம் மேம்படும். பொன்விழா வளைவு நிறுவுதல், கொடிசியா வரலாறு புத்தகம் வெளியீடு, பொன்விழா மலர் வெளியீடு, சிறு, குறு, தொழில் முனைவோரின் சாதனைகளைப் பாராட்டி விருது வழங்குதல் தொழில்துறை சார்ந்த வல்லுநர்களின் சிறப்புரைகள், புதிய தொழில் வாய்ப்புகள் குறித்து உரை நிகழ்த்த வெளிநாட்டு வல்லுநர்களை அழைத்தல், கொடிசியாவின் ஐம்பதாண்டு கால வரலாற்றை விளக்கும் புகைப்பட கண்காட்சி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும், இவ்வாறு தெரிவித்தனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...