7 ஆண்டுகளுக்கு முன் தொழிலாளியைக் கொலை செய்த கட்டிட ஒப்பந்ததாரருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கோவை : 7 ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் கட்டிட ஒப்பந்ததாரருக்கு கோவை 4-வது கூடுதல் மாவட்ட அமர்வு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

கோவை : 7 ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் கட்டிட ஒப்பந்ததாரருக்கு கோவை 4-வது கூடுதல் மாவட்ட அமர்வு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 

 

கோவை பூமார்க்கெட்டை அடுத்த தெப்பக்குளம் மைதானத்தில் வசித்து வருபவர் எம். ராதா என்கிற கிருஷ்ணன் என்கிற ராதாகிருஷ்ணன் (35). இவர் கட்டடங்களில் டைல்ஸ் ஒட்டும் வேலையை ஒப்பந்த முறையில் எடுத்து செய்து வந்துள்ளார். இவரிடம் திருப்பூர் மாவட்டம், குடிமங்கலத்தை அடுத்த பழைய போஸ்ட் ஆபீஸ் வீதியைச் சேர்ந்த டி.சக்திவேல் (48) என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், சக்திவேல் அடிக்கடி மது அருந்திவிட்டு சரிவர வேலை செய்யாமல் இருந்துள்ளார். மேலும், டைல்ஸ் சரிவர ஒட்டாததால் ராதாகிருஷ்ணனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. 

இதனால், ராதாகிருஷ்ணன் தொழிலாளி சக்திவேலின் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி தனது நண்பரான காந்திபூங்காவை சேர்ந்த குருராஜ் (28) என்பவருடன் பீளமேடு பகுதியில் உள்ள பாரில் மது அருந்தியுள்ளனர். அப்போது சக்திவேலையும் அழைத்துள்ளனர். அவரும் அவர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். பின்னர், இருவரும் சேர்ந்து சக்திவேலை விமான நிலையம் பின்புறம் உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சக்திவேலை ராதாகிருஷ்ணன் இரும்பு சங்கிலியால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார்.

இது குறித்து பீளமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராதாகிருஷ்ணன், குருராஜ் ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கானது கோவை 4-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிகட்ட விசாரணை நிறைவடைந்து, நீதிபதி ஸ்ரீதேவி இன்று தீர்ப்பு வழங்கினார். இதில், ராதாகிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். குருராஜின் மீதான குற்றம் சரிவர நிரூபிக்கப்படாததால் அவரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...