கோவை : வடசென்னை படத்தில் வந்திருப்பதைப் போலவே முரண்பட்ட காட்சிகள் வடசென்னை பகுதியில் நடந்து கொண்டு இருப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
கோவை : வடசென்னை படத்தில் வந்திருப்பதைப் போலவே முரண்பட்ட காட்சிகள் வடசென்னை பகுதியில் நடந்து கொண்டு இருப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரும் மேல்முறையீடு செய்யப்போவது குறித்த கேள்விக்கு கோவை விமானநிலையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டியளித்தார். அவர் கூறியதாவது :- யார் எங்கு சென்றாலும் தீர்ப்பு ஒன்றாகவே இருக்கும். அரசியல் சாசன அடிப்படையில் சபாநாயகர் முடிவெடுத்துள்ளார். முறைகேடுகள் வரக்கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பானது வழங்கப்பட்டுள்ளது. மேலும், எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராகவே இருக்கின்றது. உள்ளாட்சி தேர்தலை நடத்தவும் அ.தி.மு.க. தயாராகவே இருக்கின்றது. உள்ளாட்சி தேர்தலை நிறுத்தியது தி.மு.க.,தான். வழக்கு நீதித்துறையில் இருப்பதன் காரணமாக உள்ளாட்சி தேர்தல் தாமதமாகின்றது.
பதவி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும், தொண்டர்களாக வருந்தி வந்தால் அவர்களை இணைப்பது குறித்து தலைமை முடிவு எடுக்கும். நடிகர் தனுஷ் நடித்த வடசென்னை படத்தில் முரண்பட்ட காட்சிகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது. அதுபோலவே, வடசென்னையில் முரண்பாடான செயல்கள் நடந்து கொண்டு இருக்கின்றது. அமைச்சர் ஜெயக்குமார் நல்லவர், களங்கமில்லாதவர். 18 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகர் எடுத்த முடிவில் இருந்து பின்வாங்க முடியாது.
தினகரன் சொன்ன ஸ்லிப்பர் செல்கள் எங்கிருக்கின்றது என்றே தெரியவில்லை. அவற்றைத் தேடிப்பார்க்க வேண்டும். முல்லை பெரியார் அணை முன்பாக புதிய அணை அமைக்கக் கூடாது என்பதை மத்திய அரசிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். நல்ல ஆட்சியைக் கவிழ்ப்பது சரியல்ல. அப்படி செய்தால் அம்மாவின் ஆன்மா சும்மா இருக்காது. தவறு செய்தால் அவர்களை அம்மாவின் ஆன்மா மன்னிக்காது. எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க., அதை எதிர்கொள்ளும், இவ்வாறு அவர் கூறினார்.