நீலகிரி : தடை செய்யப்பட்ட கல்லட்டி மலை பாதையில் உள்ளூர் வாகனங்கள் சென்று வர ஸ்டிக்கர் வழங்கும் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டத்தில் ஆபத்தான மலை பாதைகள் அதிகம் உள்ளது. இப்பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாவது தொடர் கதையாகி வருகிறது. இதில், குறிப்பிடும்படியாக கடந்த சில நாட்களுக்கு கல்லட்டி மலை பாதையில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 5 பலியாகினர். இதைத்தொடர்ந்து, கல்லட்டி மலை பாதையில் சுற்றுலா வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. மலை பாதையில் விபத்துக்கள் நடக்காத வண்ணம் ஏற்பாடுகளை முடித்த பிறகு சுற்றுலா வாகனங்களை அனுமதிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதனால், வேற்று மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்களை இயக்க உள்ளூர் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இதனால், உள்ளூர் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் உள்ளூர் மக்கள் மனு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, கல்லட்டி மலை பாதையில் தடையின்றி உள்ளூர் வாகனங்கள் சென்று வர காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இவ்வழியாக செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு காவல்துறையின் சார்பாக ஸ்டிக்கர் வழங்க முடிவெடுக்கப்பட்டது. இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ள வாகனங்கள் மட்டும் கல்லட்டி மலை பாதையில் இயக்க முடியும்.

இந்த நிலையில், இன்று காவல்துறையின் சார்பில் உள்ளூர் வாகனங்களுக்கு ஸ்டிக்கர்கள் வழங்கும் பணிகள் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா கலந்து கொண்டு வாகனங்களுக்கு ஸ்டிக்கர்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.