திருப்பூர்: வரையறுக்கப்பட்ட ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும், ஓய்வுபெறும் அமைப்பாளர், சமையலர், உதவியாளர்களுக்கு பணிக்கொடையாக ஒட்டு மொத்த தொகை ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு சட்ட ரீதியான குடும்ப ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சத்துணவு ஊழியர்கள், இன்று 2-வது நாளாக அங்கேயே சமையல் செய்து உண்டு காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான ஊழியர்கள் கலந்துகொண்டனர்.