திருப்பூர் : விவசாய நிலங்களைப் பாதிப்புக்குள்ளாகும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் மாவட்ட நிர்வாகத்திடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில், திருப்பூர் மாவட்டத்தின் உடுமலை, தாராபுரம், காங்கேயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தனர். உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் இந்த முறை மக்காச்சோளம் பயிரிட்டுள்ளதால், உடுமலை பகுதியையொட்டிய காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் வனத்துறை மூலம் காட்டுப்பகுதியில் இருந்து காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் வராதவாறு வேலி அமைத்துக் கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். .