கேரளாவில் மர்மமான முறையில் மரணம் அடைந்து இருக்கும் பாதிரியார் குரியகோஸ் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட கன்னியாஸ்திரிகள் எல்லோரும் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள தேவாலயத்தில்தான் பிராங்கோ முலக்கல் பிஷப்பாக இருந்தார். இவர் மீது கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார். அவருக்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அவர் தற்போது ஜாமினில் வந்துள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக முன்னாள் பிஷப் பிராங்கோ முலக்கல்லுக்கு எதிராக சாட்சியம் கூறிய பாதிரியார் குரியகோஸ் கட்டுதரா மர்மமான முறையில் மரணமடைந்தார். பிராங்கோ பெயிலில் வந்த அடுத்த நாள் குரியகோஸ் மரணம் நிகழ்ந்து இருக்கும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நேற்று குரியகோஸ் இறுதிச்சடங்கு நடந்தது. இதற்கு இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து பாதிரியார்கள் வந்து இருந்தனர். குரியகோஸ் பணியாற்றிய தேவாலயத்தில் பணியாற்றிய கன்னியாஸ்திரிகளும் அந்த இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர். முக்கியமாக பிராங்கோவிற்கு எதிராக களமிறங்கி இருக்கும் கன்னியாஸ்திரிகளும் கலந்து கொண்டனர். ஆனால், இவர்கள் யாரும் குரியகோஸ் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. அங்கு முதலில் உள்ளே அனுமதிக்கப்பட்ட இவர்கள், பின் மிகவும் மோசமாக நடத்தப்பட்டு, அங்கிருந்த ஆட்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, கன்னியாஸ்திரிகள் எல்லோரும் கண்ணீருடன் வெளியேறினர்.
பின்னர், அருகாமையில் இருந்த மக்கள் வந்து தேவாலய நிர்வாகிகளுடன் கடுமையான வாக்குவாதம் செய்தனர். கன்னியாஸ்திரிகளை வெளியேற்றியது தவறு என்றும் முறையிட்டனர். அங்கு வந்த கன்னியாஸ்திரிகளில் சிலர், பிராங்கோவிற்கு எதிரான முக்கிய சாட்சியங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.