தகுதிநீக்க வழக்கில் மேல்முறையீடு செய்தால் மட்டுமே டி.டி.வி.யின் கட்சி இருக்கும் : கோவையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி

கோவை : 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், மேல்முறையீடு செய்தால் மட்டுமே டி.டி.வி. தினகரன் நடத்துகின்றன கட்சி இருக்கும் என்றும், இல்லையேல் அவரது கட்சி கானல்நீர் ஆகிவிடும் என கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறினார்.

கோவை : 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், மேல்முறையீடு செய்தால் மட்டுமே டி.டி.வி. தினகரன் நடத்துகின்றன கட்சி இருக்கும் என்றும், இல்லையேல் அவரது கட்சி கானல்நீர் ஆகிவிடும் என கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறினார். 



கோவையில் தனியார் ஓட்டல் அரங்கில் பன்னாட்டு ஜவுளிக்கண்காட்சி முன்னோட்ட விழா நடைபெற்றது. இதில், கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி ஆகியோர் பங்கேற்று லோகோ, கையேடு, இணையம் ஆகியவற்றை தொடங்கி வைத்தனர். 



பின்னர், அமைச்சர் ஓ.எஸ். மணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததாவது :- இந்தக் கண்காட்சியில் 600-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட இறக்குமதியாளர்கள் இதில் பங்கேற்பார்கள். தமிழகத்தில் வெகுவிரைவில் ஜவுளிக்கொள்கை வெளியிடப்படும். கழிவுப் பஞ்சுக்கான வரி விதிப்பை ரத்து செய்வது குறித்து பரீசிலிக்கப்படும், என்றார்.



மேலும், விசைத்தறி தொழில் நலிவடைந்து வருவதாக நிருபர்களின் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதிலாவது :- விசைத்தறி தொழில் நலிந்து விடவில்லை. விசைத்தறி கூடங்கள் மூடுவதற்கான காரணங்கள் வேறாக இருக்கும் அல்லது மாற்றுத் தொழிலுக்கு போயிருக்கலாம். ஜவுளி தொழிலில் தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக இருக்கின்றது. கைத்தறி தொழில் காலம், காலமாக இருந்து வருகின்றது. அந்தக் கைத்தறியைக் காப்பாற்ற சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. 



தமிழகத்தைப் பொறுத்தவரை ஜவுளித்தொழிலில் ரூ. 40 ஆயிரம் கோடி வர்த்தகம் நடைபெற்று வருகின்றது. தமிழ்நாட்டில் 1,136 கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கைத்தறி தொழில் நடைபெற்று வருகின்றது. மேலும், சர்வதேச வர்த்தக ஜவுளிக் கண்காட்சியில் குறைந்த கட்டணத்தில் அரங்குகள் வழங்கப்படும், என்றார்.



மேலும், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பாக மேல்முறையீடு செய்ய உள்ளதாக டி.டி.வி. தினகரன் கூறியுள்ளது தொடர்பான கேள்விக்கு, டி.டி.வி. தினகரன் மேல்முறையீடு செய்வேன் என்று சொன்னால்தான் அவருடன் யாராவது இருப்பார்கள். இல்லையெனில், அவருக்கு நாதி இல்லாமல் போய்விடும். மேலும், தினகரன் நடத்துகின்ற கட்சி விரைவில் கானல் நீராகிவிடும். நீதிபதி குறித்த தங்க தமிழ்ச்செல்வன் விமர்சனம் செய்திருப்பது, மீண்டும் வழக்கு பாயும் சூழலை ஏற்படுத்தியிருக்கிறது, இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...