கோவை : கிராமத்திற்கு மின் இணைப்பு கோரி உக்கா நகர் மக்கள் மேட்டுப்பாளையம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகாவிற்குட்பட்ட சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது உக்கா நகர் கிராமம். இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பஞ்சமி நிலம் என வருவாய்த்துறை மூலம் இங்கு குடியிருந்த மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. இதனிடையே, இந்த இடத்திற்கு உரிமைகோரி மற்றொரு தரப்பினர் வழக்கு தொடர்ந்து நீதிமன்றம் சென்றதால், அந்த பகுதிக்கு மின் இனைப்பு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், 10 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாததால், குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் இன்று மாணவர்களுடன் மேட்டுப்பாளையம் கோப்ரட்டீவ் காலனியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, மேட்டுப்பாளையம் காவல்துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்ற பின்னர், மின் இணைப்பு கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. பொதுமக்கள் போராட்டம் காரணமாக மின்வாரிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.