பாரம்பரியம் மாறாமல் நீலகிரி மலைரயில் நவீனப்படுத்தப்படும் : இந்திய ரயில்வே ஆணைய செயல் இயக்குநர்

கோவை : பாரம்பரியம் மாறாமல் நீலகிரி மலைரயில் நவீனப்படுத்தப்படும் என மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தை ஆய்வு செய்த இந்திய ரயில்வே ஆணைய செயல் இயக்குநர் விகாஸ் ஆர்யா தெரிவித்துள்ளார்.

கோவை : பாரம்பரியம் மாறாமல் நீலகிரி மலைரயில் நவீனப்படுத்தப்படும் என மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தை ஆய்வு செய்த இந்திய ரயில்வே ஆணைய செயல் இயக்குநர் விகாஸ் ஆர்யா தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள ரயில்நிலையத்திற்கு இன்று காலை வந்தடைந்த இந்திய ரயில்வே ஆணைய செயல் இயக்குநர் விகாஸ் ஆர்யா, ரயில்நிலையம் மற்றும் மலைரயில் கண்காட்சி அரங்கம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு இயக்கப்படும் உலக பாரம்பரிய சின்னமான நீலகிரி மலைரயிலின் பழமையும், பாரம்பரியமும் மாறாமல் அதனை நவீனப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. 



புதிதாக இம்மலை ரயிலுக்கென புதிய நீராவி எஞ்சின்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவை நூற்றாண்டுகள் கடந்த மலைரயில் என்ஜின்களை போலவே உருவாக்கப்பட்டு வருகின்றன. மலைரயிலை நவீனப்படுத்தும் போது, இதன் இயக்கத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதையும் கவனத்தில் கொள்கிறோம். பிற ரயில்களைப் போல மலைரயில் பயணிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குவது குறித்து தற்போது திட்டமில்லை. 3 மணிநேர பயணத்திற்கு தேவையான உணவு பொருட்களை பயணிகளே கொண்டு வரலாம். மேலும், மலைரயில் இடை நிற்கும் ரயில் நிலையங்களில் இந்த வசதி மேம்படுத்தப்படும், என்றார்.

இந்தியாவில் உள்ள மிக பழமையான ரயில்நிலையங்களில் மேட்டுப்பாளையம் ரயில்நிலையமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...