திருப்பூரை சேர்ந்த கின்னஸ் சாதனையாளர் ஹேமச்சந்திரன் தற்கொலை

திருப்பூர் : திருப்பூரை அடுத்த நல்லூர் பகுதியில் வசித்து வந்தவர் ஹேமச்சந்திரன் (28). இவர் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ம் தேதி அன்று திருப்பூரில் தனது விரல் நகத்தில் துளையிட்டு 22.5 கிலோ எடையைத் தூக்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார்.

திருப்பூர் : திருப்பூரை அடுத்த நல்லூர் பகுதியில் வசித்து வந்தவர் ஹேமச்சந்திரன் (28). இவர் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ம் தேதி அன்று திருப்பூரில் தனது விரல் நகத்தில் துளையிட்டு 22.5 கிலோ எடையைத் தூக்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார்.



தொடர்ந்து பிரபல முன்னணி தொலைக்காட்சிகளின் விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். அதோடு, மூக்கில் 2 இன்ச் டிரில் மெசின் வைத்து இயக்கியும் சாதனை படைத்தார். 22.5 கிலோ வரை நகத்தால் தூக்கி உலகிலேயே நகத்தின் பலம் கொண்டவர் என்ற கின்னஸ் சாதனையாளரானார்.



ஆனால், இன்று திடீரென நல்லூர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் திருமணம் செய்து கொண்டு 11 மாதங்களே ஆன நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, குடும்ப பிரச்சனையா? அல்லது கடன் தொல்லையா? என நல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...