கோவை: பெண் சிறுத்தை தனது இரண்டு குட்டிகளுடன் மதுக்கரை வனப்பகுதியில் நடமாடுவது கண்டறியப்பட்டுள்ளது.
கோவை : பெண் சிறுத்தை தனது இரண்டு குட்டிகளுடன் மதுக்கரை வனப்பகுதியில் நடமாடுவது கண்டறியப்பட்டுள்ளது.
சில நாட்களில் வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளில் மேய்ச்சலுக்கு விடப்பட்ட ஆடுகள் மற்றும் தெரு நாய்கள் விலங்குகளால் தாக்கப்பட்டன. இந்த சூழலில் தற்போது சிறுத்தை தென்பட்டுள்ளது.

தற்போது சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியை நெருங்கி மக்கள் யாரும் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதோடு, வனப்பகுதிகளுக்குள் யாரும் செல்லக்கூடாது என்ற தடையும் வனத்துறையினர் விதித்துள்ளனர்.

ஏசிசி சிமென்ட் தொழிற்சாலைக்கு அருகே கடந்த ஜனவரி மாதம் சிறுத்தை மற்றும் அதன் குட்டிகள் நடமாட்டம் கண்டறியப்பட்டது. " இந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் என்பது சாதாரண ஒன்று தான். ஆனால், எங்கள் குடியிருப்பின் அருகில் சிறுத்தை வருவதை நினைக்கும் போது சற்று அச்சப்பட வேண்டி உள்ளது." என்கின்றனர் மதுக்கரை வாசிகள்.