கோவை: தீபாவளி பண்டிகைக்கு கோவையிலிருந்து சென்னைக்கு கூடுதலாக 10 பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் (கோவை) திட்டமிட்டுள்ளது.
கோவை : தீபாவளி பண்டிகைக்கு கோவையிலிருந்து சென்னைக்கு கூடுதலாக 10 பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் (கோவை) திட்டமிட்டுள்ளது.
நவம்பர் 6-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனிடையே பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்குவது வழக்கம்.
இந்த சூழலில், உள்ளூரில் மட்டும் பேருந்துகளை இயக்கம் (கோவை) அரசு போக்குவரத்து கழகம் பயணிகளின் வசதிக்காக சென்னைக்கு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, நவம்பர் 1-ம் தேதி முதல் கோவையிலிருந்து சென்னைக்கு தினமும் 10 பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் (கோவை) திட்டமிட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவையிலிருந்து சென்னைக்கு முன்பதிவு வசதியுடன் பேருந்துகளை இயக்கவுள்ளோம். http://www.tnstc.in என்ற இந்த இணையதள முகவரியின் மூலம் இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். அடுத்த வாரம் முதல் முன்பதிவு தொடங்க ஏற்பாடு செய்யப்படும்." என்றார்.