முதலமைச்சர் கோவை வருகை: முன்னேற்பாடுபணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது வாகனம் மோதியதில் படுகாயம்

கோவை: தமிழக முதலமைச்சர் கோவை வருவதைத் தொடர்ந்து முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வந்த மாநகராட்சி பணியாளர்கள் மீது வாகனம் மோதியதில் இரண்டு பேர் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை : தமிழக முதலமைச்சர் கோவை வருவதைத் தொடர்ந்து முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வந்த மாநகராட்சி பணியாளர்கள் மீது வாகனம் மோதியதில் இரண்டு பேர் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவையில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகள் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். 

இதற்காக, முதல்வரை வரவேற்கும் விதமாக, கோவை முழுவதும் பேனர்கள், பிளக்ஸ்கள், போஸ்டர்களை வைத்து குவித்துள்ளன. மேலும், சாலைகளை சீரமைப்பது, சாலை நடுவே இருக்கும் டிவைடர்களை அலங்கரிப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள டிவைடர்களை அலங்கரிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது, அங்கு வந்த இரு சக்கர வாகனம் ஒன்று சாலை பணியில் ஈடுபட்டு வந்த பணியாளர்கள் மீது மோதியது.

இதில், ருக்குமணி, ராஜேஸ்வரி என்ற இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் ருக்மணிக்கு தலையிலும், ராஜேஸ்வரிக்கு காலிலும் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவருக்கும் தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...