கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய சத்துணவு ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் இன்னும் தொடர்கிறது.
கோவை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய சத்துணவு ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் இன்னும் தொடர்கிறது.
சத்துணவு ஊழியர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 500 மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் வழங்குதிடுதல் மற்றும் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ரூ.3 லட்ச ரூபாய் பணிக்கொடை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்து இருந்தனர். இந்த நிலையில், இதுவரை தமிழக அரசு தங்களை அழைத்து பேசவில்லை என கூறி இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தங்கள் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே சமையல் செய்து நூதன முறையில் தங்களது போராட்டத்தை வெளிப்படுத்தினர்.

அவர்கள் எந்தவித பேச்சுவார்த்தைக்கும் அழைக்கப்படாத காரணத்தால் இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக ஆட்சியர் அலுவலகத்தில் கூடாரம் அமைத்து கொட்டும் பனி, கொசு ஆகியவற்றை பொருட்படுத்தாமல் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கைது செய்யப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.