கோவை : 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் சரியான நியாயமான தீர்ப்பை வழங்கி இருப்பதாகவும், இதற்கு பொது மக்களும், கட்சியினரும் வரவேற்பதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில்நீதிமன்றம் சரியான நியாயமான தீர்ப்பு வழங்கி இருக்கின்றது. இதை பொதுமக்களும், கட்சியினரும் வரவேற்கின்றனர். மேலும், டெங்கு உட்பட காய்ச்சல் பரவலை தடுக்க அனைத்து அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. 300 வீடுகளுக்கு ஒரு ஊழியர் என சுகாதாரத்துறை ஊழியர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தேவையான அளவு பிளிச்சிங் பவுடர் உட்பட அனைத்துப் பொருட்களும் தயார் நிலையில் இருக்கிறது. இது தவிர உள்ளாட்சித் துறையில் 1.86 லட்சம் ஊழியர்கள் இந்த நோய் தடுப்பு பணியில் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களை தினமும் மாஸ் கிளினிங் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை மட்டுமின்றி தனியார் மருத்துவமனையில் கணக்கெடுப்பு பணி நடத்த சொல்லி இருக்கின்றோம். ஏதாவது, ஒரு பகுதியில் காய்ச்சல் பரவினால் அங்கு கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த முறையை விட 90 சதவீதம் டெங்கு காய்ச்சல் பரவல் குறைவாகவே இருக்கின்றது, இவ்வாறு அவர் கூறினார்.