கோவை : மாணவி சோபியாவை மிரட்டிய புகாரில் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் மீது வழக்குப் பதிவு செய்ய தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 3-ம் தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் ஆராய்ச்சி படிப்பு மாணவி சோபியா (23) சென்று கொண்டிருந்தார். அதே விமானத்தில் தமிழக பா.ஜ.க., தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும் தூத்துக்குடி சென்றார். அப்போது, மாணவி சோபியா பாசிச பா.ஜ.க. ஒழிக என விமானத்தில் முழக்கமிட்டார். இது தொடர்பாக, தமிழிசை சவுந்திர ராஜனின் புகாரின் பேரில் சோபியா கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையத்தில் மாணவி சோபியா விளக்கம் அளித்தார். மேலும், பா.ஜ.க., மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் மீது வழக்கும் தொடரப்படும் என சோபியா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மாணவி சோபியாவை மிரட்டிய புகாரில் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் மீது வழக்குப் பதிவு செய்ய தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழிசை உட்பட 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்ய ஆணையிட்டுள்ளது.