திருப்பூர் : கல்வியை காவிமயமாக்குவதாகக் கூறி திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அதிகாரியைக் கண்டித்து திருப்பூரில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் : கல்வியை காவிமயமாக்குவதாகக் கூறி திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அதிகாரியைக் கண்டித்து திருப்பூரில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் கடந்த 22-ம் தேதி ஜெய்வாபாய் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. வரலாற்று நிகழ்வுகள் தொடர்பான பயிற்சி முகாம் என்றழைக்கப்பட்ட நிலையில், தமிழக பாடத்திட்டத்திற்கு சம்பந்தமில்லாத நிகழ்வுகளை எடுத்ததோடு, ஓம் என்று சொல்லி தான் வகுப்பை நடத்த வேண்டும் என்றும், அப்படி செய்தால் தான் மாணவ மாணவிகள் படிப்பில் மேன்மை அடைய முடியும் என ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டதாகப் பட்டதாரி ஆசிரியர்கள் குற்றம்சாட்டினர் .

இந்த நிலையில், திருப்பூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை மற்றும் கல்வியை காவிமயமாக்கும் திருப்பூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரி சாந்தியை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி முன்பு தமிழ்நாடு மாணவர் கழகம், திராவிட விடுதலை கழகம் சார்பில் கொளத்தூர் மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் குமரன் சிலை முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டதோடு மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரி சாந்திக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர்.