கோவை : சிவானந்தா காலனியில் மத்திய தொழிலாளர் நல அலுவலகத்தில் நடைபெற்ற தேசிய பஞ்சாலை தொழிலாளர்களுக்கான போனஸ் குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

என்.டி.சி. பஞ்சாலை தொழிலாளர்களுக்கான போனஸ் பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. கோவை சிவானந்தகாலனியில் மத்திய தொழிலாளர் நல அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதில், நிரந்தர தொழிலாளிகளுக்கு ரூ. 11,000 முன்பணம் மற்றும் ரூ. 7,000 போனஸும், தினக்கூலிகளுக்கு ரூ. 7,000 போனஸ் என முடிவு எட்டப்பட்டது. மொத்தம் ரூ. 6 கோடி நவம்பர் 2-ம் தேதிக்குள் தொழிலாளர்களுக்கு பட்டுவாடா செய்ய மில் நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையில் எல்.பி.எப்., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., ஏ.டி.பி. ஆகிய அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இதில், தொழிலாளர் நலத்துறை சார்பில் அண்ணாதுரை, என்.டி.சி. பஞ்சாலை நிர்வாகத்தின் சார்பில் அலுவலக மேலாளர் வெங்கடேஷ்வரன் மற்றும் சுதாகர் ஆகியோர் பங்கேற்றனர். இதில், தமிழகத்தில் உள்ள ஏழு பஞ்சாலைகளை சேர்ந்த 3,000 பேர் பலன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.