திருப்பூர் : உழவர் சந்தையின் விற்பனை நேரத்தில் மொத்த காய்கறி சந்தை செயல்படுவதற்கு தடை விதிக்குமாறு சார் ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்னம்பாளையம் உழவர் சந்தை செயல்படும் நேரத்தில், தினசரி மொத்த காய்கறி சந்தையும் முழுவீச்சில் வியாபாரம் நடப்பதால் உழவர் சந்தைக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், போதிய வியாபாரம் இன்றி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, உழவர் சந்தை செயல்படும் நேரத்தில் மொத்த காய்கறி சந்தையில் விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டுமென சார் ஆட்சியரிடம் விவசாயிகள் நேரில் முறையிட்டனர்.

இதைத் தொடர்ந்து, திருப்பூர் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் தென்னம்பாளையம் உழவர் சந்தை விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு சார் ஆட்சியர் ஸ்ரவன்குமார் தலைமை வகித்தார்.
இதில், விவசாயிகள் சார்பில் கலந்து கொண்ட ஈஸ்வரன், ராஜாமணி, கோபால் ஆகியோர் பேசியதாவது :- திருப்பூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் நலன் கருதி திருப்பூர்-பல்லடம் ரோடு தென்னம்பாளையம் பிரிவில் உழவர் சந்தை தொடங்கப்பட்டது. தென்னம்பாளையம் மொத்த காய்கறி சந்தையில் 24 மணி நேரமும் வியாபாரம் நடப்பதால் உழவர் சந்தைக்கு வரும் நுகர்வோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை முழுமையாக விற்க முடியாமல் மொத்த காய்கறி மார்க்கெட்டிலுள்ள வியாபாரிகளிடம் அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டிய பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

இதனால், விவசாயிகளுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்காமல் கடன் வாங்கி விவசாயம் செய்ய வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. உழவர் சந்தையை சுற்றிலும் பலர் தனியார் தள்ளுவண்டிகள், தரைக்கடைகள் வைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால், விவசாயிகள் கொண்டு வரும் காய்கறி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உழவர் சந்தை செயல்படும் நேரமான காலை 3 மணி முதல் காலை 7 மணி வரை மொத்த காய்கறி சந்தையின் விற்பனையைத் தடை செய்ய வேண்டும். உழவர் சந்தையை சுற்றிலும் தள்ளுவண்டி, தரைக்கடைகள் வைக்க அனுமதிக்கக் கூடாது. மாட்டுச் சந்தையை வேறு இடத்திற்கு மாற்றி உழவர் சந்தையின் வளாகத்தை அதிகரிக்க வேண்டும்.

மொத்த காய்கறி சந்தையில் உள்ள புரோக்கர்களை வெளியேற்ற வேண்டும். வெளிமாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து காய்கறி இறக்குமதியை தடை செய்ய வேண்டும். மொத்த காய்கறி சந்தையிலுள்ள புரோக்கர்களை வெளியேற்ற வேண்டும். இல்லையெனில் உழவர் சந்தையை காட்டன் மார்க்கெட்டிற்கு மாற்ற வேண்டும், இவ்வாறு அவர்கள் பல்வேறு கோரிக்களை முன்வைத்தனர்.
பின்னர், சார்-ஆட்சியர் ஸ்ரவன்குமார் கூறுகையில், "உங்களுடைய கோரிக்கைகள் குறித்து மாநகராட்சி, வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்," என்றார். இந்தக் கூட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.