கோவை : கோவை சர்வதேச விமான நிலையத்தில் துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் மூக்கை மூடிக் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் ஏராளமான பயணிகள் வந்து செல்லும் நிலையில், பயணிகள் வருகை தரும் பகுதியின் அருகே துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், பயணிகளை வரவேற்க வருபவர்கள் அங்கு போடப்பட்டுள்ள நாற்காலியில் அமர தயக்கம் காட்டுகின்றனர். மேலும், இங்கு தனியாருக்கு கொடுக்கப்பட்டு உள்ள தேனீர் அருந்தும் இடம் அருகில் புதிதாக போடப்பட்ட ஸ்லாப்கள் உடைந்து காணப்படுகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்க முற்பட்டால் சந்திக்க முடியாத சூழலே உள்ளது.
சர்வதேச விமான நிலையம் எனக் கூறி கொள்ளும் கோவை விமான நிலையம் தரம் காப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் ஆசையாக உள்ளது. மக்களின் கோரிக்கைகளுக்கும், ஆசைகளுக்கும் இணங்க இதுபோன்ற பிரச்சனைகளில் விமான ஆணையம் மற்றும் இங்கு உள்ள அதிகாரிகள் கண்டு கொள்ளுவார்களா..? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.