கோவை : சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, தற்போது காலியாக இருக்கும் 18 தொகுதிகளிலும் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும் என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நீலகிரியில் நடைபெறும் பொதுக்கணக்கு குழு ஆய்வு கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் இன்று விமானம் மூலம் கோவை வந்தார்.
அங்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என அக்கட்சியினர் கருத்துக்கு இடைத்தேர்தலில் யாரை கேட்டாலும் ஜெயிப்போம் என்றுதான் சொல்வார்கள். தேர்தல் நடைபெற்றால் தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும். மேலும், இந்த தீர்ப்பால் எங்களுக்கு எந்த பாதகமும் இல்லை. அ.தி.மு.க.,வினரிடையே இருக்கும் பிரச்சனை காரணமாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை அவர்கள் வெளியேற்றினார்கள். இந்த தீர்ப்பால் எங்களுக்கு எதுவும் இல்லை, இவ்வாறு அவர் கூறினார்.